மலையக மக்களை ஒதுக்கப்பட்ட சமூகமாக பேசுவது முட்டாள் தனமானது – ஜீவன் சபையில் எடுத்துரைப்பு

மலையகத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு உயர் தொழில்களில் ஈடுபட்டுவரும்
நிலையில் மலையக மக்கள் மாத்திரம் ஒதுக்கப்பட்ட மக்களாகவும்
வறுமைக்குட்பட்ட மக்களாகவும் பேசுவது முட்டாள் தனமான விடயமாகும் என ஜீவன்
தொண்டமான் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை தேசிய ஐக்கிய முன்னணி மற்றும் தமிழ்
முற்போக்கு கூட்டணி இணைந்கொண்டுவந்த நாட்டின் தற்போதைய நெருக்கடி
தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு
உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் ஒதுக்கப்பட்ட சமூகம் எனும்போது அனைவரும் மலையக மக்களை
மாத்திரமே சுட்டிக்காட்டி பேசுகின்றனர்.

நாட்டில் வேறுயாரும் ஒதுக்கப்பட்டவர்கள் இல்லையா என கேட்கின்றேன். மலையக
மக்கள் மாத்திரம் ஒதுக்கப்பட்ட மக்களாகவும் வறுமைக்குட்பட்ட மக்களாகவும்
பேசுவது முட்டாள் தனமான விடயமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்