
மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் வெகு விரைவில்
ஆரம்பிக்கப்படும். கட்சி, தொழிற்சங்க பேதங்களின்றி பயனாளிகளுக்கு உரிய
வகையில் வீடுகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இ.தொ.கா
கட்சியின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட
உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
அத்துடன், சவாலை எதிர்கொள்ள வேண்டுமெனில் களத்தில் இறங்கியாக வேண்டும்.
நெருக்கடியை கண்டு பின்வாங்கி நிற்பது ஏற்புடையதல்ல. அதனால்தான்
நெருக்கடியான சூழ்நிலையில் அமைச்சு பதவியை ஏற்றேன். மாறாக, பதவி ஆசையில்
அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.