மற்றுமோர் நாட்டிற்குள் நுழைந்தது உயிர் கொல்லி கொரோனா வைரஸ்!

இத்தாலி எல்லையிலிருக்கும் சுவிஸ் மாகாணமான டிசினோ மாகாணத்துக்குள் கொரோனா வைரஸ் நுழைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸிலிருந்து தப்பித்துக்கொள்ள உலக நாடுகள் அனைத்தும் முன்னெச்சரிக்கையாக செயற்பட்டுவருகின்றன.

இருப்பினும் இதுவரையில் 30 இற்கும் மேற்பட்ட நாடுகளை கொரோனா வைரஸ் தொற்றிக்கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சீனாவில் 2500 இற்கும் மேற்பட்டவர்கள் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் இத்தாலி எல்லையிலிருக்கும் சுவிஸ் மாகாணமான டிசினோ மாகாணத்துக்குள் கொரோனா வைரஸ் நுழைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

டிசினோ மாகாணத்தில் வசிக்கும் முதியவர் ஒருவர், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக இத்தாலியிலுள்ள மிலன் பகுதிக்கு சென்றிருக்கிறார்.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஐ தொட்டுவிட்ட நிலையில், இத்தாலிக்கு சென்ற அந்த சுவிஸ் முதியவருக்கு கொரோனா தொற்றியுள்ளது.

தற்போது, அவர் லுகானோவிலுள்ள ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருடன் தொடர்பிலிருந்தவர்களுக்கும் கொரோனா தொற்று உள்ளதா என பரிசோதிக்கப்பட இருப்பதோடு, அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு அடுத்த 14 நாட்களுக்கு கண்காணிக்கப்பட உள்ளார்கள்.

முகநூலில் நாம்