மறைந்த ஆறுமுகன் தொண்டமான் பிரதமரிடம் இறுதியாக சொன்ன விடயம்!

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு, வீட்டுப் பிரச்சினை உட்பட தோட்ட மக்களின் வாழ்வை வளப்படுத்த சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தினூடாக விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த அமைச்சர் தொண்டமான் இறுதியாக தோட்டத்திலுள்ள மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பது குறித்தே கலந்துரையாடினார்.

மூன்று சந்தர்ப்பங்களில் பெருந்தோட்ட நிறுவனங்களுடன் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

தேர்தல் காலத்தில் சம்பள உயர்வு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு தேர்தல் சட்டங்கள் இடையூறாக காணப்படுவதால் தேர்தலின் பின்னர் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி தோட்டத் தொழிலாளர்களுக்கு நீதியை நிலைநாட்டுவோம்.

தோட்ட தொழிலாளர்களுக்கு முதலில் கொன்கிரீட் செய்யப்பட்ட வசதிகள் கொண்ட வீதிகள் 2005 முதல் 2015 வரையான காலப்பகுதியிலேயே நிர்மாணிக்கப்பட்டன

குறித்த காலப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தை அடுத்து இன்று தோட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வெளியில் சென்றுள்ளனர்.

அவர்கள் கொழும்பில் பல அரச நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

தோட்ட வீடுகள் இதுவரை தோட்டங்களில் பணியாற்றியவர்களுக்கே வழங்கப்பட்டது.

தோட்டத்தில் வசிக்கும் மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் பதியப்பட்டுள்ளவர்களுக்கும் வீடுகளை வழங்குமாறு மறைத்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கோரியிருந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தில் தோட்டங்களை அண்மித்த மக்களின் வாழ்க்கையை வளப்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முகநூலில் நாம்