
மறு அறிவித்தல் வரும் வரை யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வட மாகாணத்தில் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு நாளை காலை 6 மணிக்கு நீக்கப்படவிருந்தது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றும் நிலைமையை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு மாத்திரம் மீள் அறிவிப்பு வரை ஊரடங்கு உத்தரவினை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ஏனைய மாவட்டங்களில் ஏற்கனவே அறிவித்தமைக்கு அமைய பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுலில் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
