மறுஅறிவித்தல் வரை பிற்போடப்பட்டது பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா மறு அறிவித்தல்வரை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிகபட்டுள்ளது.

கொரோனா அச்சத்தினை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டின் அரச பல்கலைக்கழகங்களை இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியிருந்தது.

இதன் காரணமாக எதிர்வரும் 16 ஆம் 17 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச். அப்துல் சத்தார் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 5 பீடங்களினதும் 988 உள்வாரிப் பட்டதாரிகள் பட்டங்களைப் பெறவுள்ளதுடன் 22 பேர் வியாபார நிர்வாக முதுமாணிப் பட்டத்தினையும் 03 பேர் முதுகலைமாணி பட்டத்தினையும் பெறவுள்ளனர்.

மேலும் இதன்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் எம்.ஏ. கரீம் மற்றும் அதே பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை மூத்த விரிவுரையாளர் எம்.ஐ.எம். அமீன் ஆகியோர் கௌரவ கலாநிதிப் பட்டங்களைப் பெறவிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்