மருத்துவர்களுக்கான மேலதிகநேரக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு

மருத்துவர்களுக்கான மேலதிகநேரக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் மட்டும் மூவாயிரம் மருத்துவர்களுக்கு மேலதிகநேரக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் முதல் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.மேலதிகநேரக் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என அதிகாரிகளுக்கு நான்கு மாதங்களாக நினைவூட்டல்கள் மேற்கொள்ளப்பட்டாலும் இதுவரையில் உரிய பதில் கிடைக்கவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் துணைச் செயலாளர் டொக்டர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், கொரோனா வைரஸ் தொற்று அனர்த்த நிலைமையினால் தொழிற்சங்க போராட்டங்கள் முன்னெடுக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முகநூலில் நாம்