
மருத்துவமனைகளில் மருந்துகளின் பற்றாக்குறை இந்த மாத இறுதிக்குள் தீர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அரசாங்க மருந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் டாக்டர் பிரசன்னா குணசேன தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இதுவரையில் 392 வகையான மருந்துகளின் பற்றாக்குறை உள்ளது.
இவற்றில் 144 மருந்துகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மருத்துவமனைகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருந்து பற்றாக்குறை ஏற்படுமென அறிந்ததும் எட்டு மாதங்களுக்கு முன்பு நிறுவனத்திற்கு தகவல் வழங்கப்படவில்லை.
இதனாலேயே மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. டெண்டர் அழைக்கப்பட்டவுடன் அதனை செயற்படுத்த எட்டு மாதங்கள் ஆகும் என கூறியுள்ளார்