மரண தண்டனை முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை

மரண தண்டனையை அமுல்படுத்துவதில்லை என அரசாங்கம் எடுத்துள்ள கொள்கை முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 04 பிரதிவாதிகளுக்கு மரணதண்டனை வழங்குவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 ஆம் ஆண்டு தீர்மானம் எடுத்திருந்தார்.

இந்த தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (31) உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

விஜித் மலல்கொட, எல்.டி.பி. தெஹிதெனிய மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற குழு முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சட்டமா அதிபர் சார்ப்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே குறித்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்