மரக்கறிகளை ஏற்றிச்சென்ற பாரவூர்தி விபத்து!

வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி மரக்கறிகளை ஏற்கொண்டு பயணித்த சிறிய ரக பாரவூர்தி ஒன்று குடைசாய்ந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை (13) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு மாங்குளம் காவல்துறை பிரிவிற்குற்பட்ட கொக்காவில் பகுதி ஏ9 வீதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே குறித்த சம்பவத்திற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் காயமடைந்த நபர் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

முகநூலில் நாம்