மன்னார் மறைமாவட்ட ஆயர் – ஜனாதிபதி சந்திப்பு

மன்னார் மறைமாவட்ட ஆயர் பிடெல்ஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைஉள்ளிட்டகுழுவினர் நேற்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதிரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர்.மன்னார் காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில்ஜனாதிபதியிடம் விளக்கமளிக்கப்பட்டதுடன், அது தொடர்பில் கவனம் செலுத்தியஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உடனடியாகநடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.மடு யாத்திரைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதுதொடர்பிலும் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.இந்நிகழ்ச்சியில் அருட்தந்தை ஜொய்ஸ் பெப்பி சொசாய் (Joyce Peppi SosaiSantia) அருட்தந்தை ஆண்டனி சொசாய் (Antony Sosai) உள்ளிட்டஅருட்தந்தையர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தனஆகியோரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்