
மன்னார் – மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான
திகதியை அறிவிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார் சதொச மனித புதைகுழி தொடர்பான வழக்கு மன்னார் நீதவான் நீதிமன்றில்
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு இன்று (17) உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கத் தேவையான நிதி குறித்து கோரிக்கை
விடுக்கும் பட்சத்தில் காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகம் அது தொடர்பில்
நடவடிக்கை எடுக்குமென நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு
விசாரணை அடுத்த மாதம் 30ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.