மன்னார் கடற்படுகை எண்ணெயை பயன்படுத்துவதே கடனில் இருந்து மீள வழி

இலங்கை எதிர்கொள்ளும் வெளிநாட்டுக் கடன் நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கான ஒரே வழி மன்னார் கடற்படுகையில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஆராய்வது தான் என்று எரிசக்தி அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

இலங்கை தற்போது 4700 கோடி அமெரிக்க டொலர்களுக்கு கடன்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மன்னார் பேசினில் பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு வைப்புக்களை ஆராயும் தொழில்நுட்பம் இலங்கையில் இல்லாததால், தற்போது சர்வதேச முதலீட்டளர்களின் உதவியைப் பெற கவனம் செலுத்தப்படுகின்றது.


மன்னார் கடற்படுகையில் தற்போது எம் – 2 என அழைக்கப்படும் பரக்குடா பகுதியில் 200 கோடி பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 15 ஆயிரம் கோடி அமெரிக்க டொலர்களாகும்.


இங்கு 9 ரில்லியன் கனஅடி எரிவாயு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு 1700 கோடி அமெரிக்க டொலர்களாகும். ஆகவே, இந்த பெற்றோலியம் மற்றும் எரிவாயு ஊடாக நாம் 16700 கோடி அமெரிக்க டொலர்களை சம்பாதிக்க முடியும்.


இது எமது நாட்டின் மொத்த வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் போது 12 ஆயிரம் கோடி அமெரிக்க டொலர்களை மீதப்படுத்தும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்