மன்னாரில் மிகவும் பழமை வாய்ந்த புராதன ஆலயத்தில் இடம்பெற்ற அசாம்பாவிதம்!

மன்னார் தோட்ட வெளி கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த, புராதன ஆலயமாக திகழும் தோட்டவெளி தூய அந்திரேயா அப்போஸ்தலர் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு பெரும் தொகையான பணம் திருடப்பட்டுள்ளது.

குறித்த ஆலயத்தின் ஜன்னல் பகுதியூடாக உள்ளே சென்ற திருடர்கள் ஆலயத்தின் உள்ளே காணப்பட்ட உண்டியலின் பூட்டை உடைத்து உண்டியலில் காணப்பட்ட பெருந் தொகையான பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

காலை ஆலயத்தினுள் சென்றவர்கள் உண்டியல் உடைக்கப்பட்டதை அவதானித்து ஆலய நிர்வாகத்திற்கு தெரியப்படுத்திய நிலையில் ஆலய நிர்வாகத்தினர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முகநூலில் நாம்