மன்னாரில் புதிய பஸ் நிலையம் கையளிப்பு!

மன்னாரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம் இன்று (25) மக்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கடந்த ஜூன் மாதம் 7ம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் 130 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பஸார் பகுதியில் சகல வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.

முகநூலில் நாம்