மனோ கணேசன் – ஆஸ்திரேலிய தூதுவர் சந்திப்பு

தமிழ் முற்போக்கு கூட்டணி – ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், கொழும்பு
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கும், கொழும்பில்  உள்ள
இலங்கைக்கும், மாலைதீவுக்குமான ஆஸ்திரேலிய தூதுவர் போல் ஸ்டீபனுக்கும்
இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கொழும்பில் உள்ள ஆஸ்திரேலிய
தூதுவரின் இல்லத்தில்  நிகழ்ந்த இந்த சந்திப்பு பற்றி மனோ கணேசன் எம்பி
தெரிவித்ததாவது,

 சமீபத்தில் நான் ஆஸ்திரேலியாவுக்கு மேற்கொண்ட அதிகாரபூர்வ பயணம்
தொடர்பில் உரையாடினோம். ஆஸ்திரேலியாவில் திகழும் பன்மைத்துவ கலாச்சாரம்
பற்றிய பாடங்கள் இலங்கைக்கு அவசியம் என்பதை ஆஸ்திரேலிய தூதுவர் போல்
ஸ்டீபனுக்கு தெரிவித்தேன்.

குறிப்பாக ஆஸ்திரேலிய அரசு மற்றும் அரசு நிலை அரசியல் பிரமுகர்கள் அங்கு
வாழும், இலங்கையர்களுடன் குறிப்பாக புலம் பெயர்ந்துள்ள சிங்கள
ஆஸ்திரேலியர்களுடனும், அவர்களது அமைப்புகளுடனும் தொடர்புகளை மேம்படுத்தி
அவர்கள் மூலம் பன்மைத்துவ சிந்தனையை இலங்கைக்குள் கொண்டு வர உதவ
வேண்டுமென வலியுறுத்தினேன்எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்