மனைவியை கொலை செய்த கணவன் பொலிஸில் சரண்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் தனது 20 வயதுடைய மனைவியின் கழுத்த நெரித்து அவரை கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (16) ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 22 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழடித்தீவு காளிகோவில் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வசித்து வரும் இளம் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டுள்ள சந்தேகத்தினால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை (15) தனது 20 வயதுடைய சிவலிங்கம் கஜேந்தினி என்ற மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தனது 2 அரை வயது குழந்தையை தூக்கி கொண்டு தனது சகோதரியின் வீட்டிற்கு கொண்டு சென்று ஒப்படைத்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் குறித்த நபர் சரணடைந்த நிலையில் பொலிசார் அவரை கைது செய்தனர்.

இதனையடுத்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் நீதிமன்ற உத்தரவுக்கமைய பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனையில் கழுத்து நெரித்ததன் காரணமாக குறித்த பெண் உயிரிழந்துள்ளார் என சட்டவைத்திய அதிகாரி அறிவித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 30 வயதுடைய கணவன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (16) ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 22 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்