
உக்ரைனில் ரஸ்ய படையினர் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட பகுதிகளிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பனிஸ் உக்ரைனிற்கு 100 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் இராணுவஉதவியை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

விளாடிமிர் புட்டினின் படையெடுப்பின் ஈவிரக்கமற்ற தன்மைக்கான அடையாளங்களாக மாறியுள்ள மூன்று நகரங்களிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.இந்த நகரங்களில் இருந்து ரஸ்ய படையினர் பின்வாங்கிய பின்னர் பாரிய படுகொலைகள் சித்திரவதைகள் இடம்பெற்றிருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
குண்டுவீச்சினால் முற்றாக அழிக்கப்பட்ட வீடுகள் கண்ணிவெடிகளின் தடயங்கள் அழிக்கப்பட்ட விமானநிலையம் ஆகியவற்றினை பார்த்து அவுஸ்திரேலிய பிரதமர் அதிர்ச்சியடைந்தார் என கீவ் பிராந்தியத்தின் ஆளுநர் ஒலெக்சி குலேபா தெரிவித்துள்ளார்.
குண்டுவீச்சினால் முற்றாக அழிக்கப்பட்ட வீடுகள் கண்ணிவெடிகளின் தடயங்கள் அழிக்கப்பட்ட விமானநிலையம் ஆகியவற்றினை பார்த்து அவுஸ்திரேலிய பிரதமர் அதிர்ச்சியடைந்தார் என கீவ் பிராந்தியத்தின் ஆளுநர் ஒலெக்சி குலேபா தெரிவித்துள்ளார்.
குண்டுவீச்சில் முற்றாக சிதைவடைந்து ஜன்னல்கள் மாத்திரம் காணப்படும் வீடுகளை அவுஸ்திரேலிய பிரதமர் பார்வையிடுவதையும் அழிக்கப்பட்ட விமானநிலையத்திற்குள் அவர் காணப்படுவதையும் காண்பிக்கும் படங்களை கீவ் பிராந்தியத்தின் ஆளுநர் வெளியிட்டுள்ளார்.
பின்னர் உக்ரைன் ஜனாதிபதியுடன் இணைந்து நடத்திய செய்தியாளர்மாநாட்டில் அவுஸ்திரேலியா உக்ரைனிற்கு 14இராணுவகவசவாகனங்களையும்,20 புஸ்மாஸ்டர் வாகனங்களையும் வழங்கும் என அறிவித்துள்ளார்.
ரஸ்யாவின் தங்க இறக்குமதி மீதான தடை 16 ரஸ்ய அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள் மீதான தடைகள் குறித்தும் அவுஸ்திரேலிய பிரதமர் அறிவித்துள்ளார். ரஸ்யாவின் படையெடுப்பு பாரிய சர்வதேச சட்ட மீறல் என அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மக்களிற்கு ரஸ்யாவின் படையெடுப்பு ஏற்படுத்திய பேரழிவை அதிர்ச்சியை நான் நேரடியாக பார்த்தேன் என தெரிவித்துள்ள பிரதமர் உக்ரைன் தலைநகரிற்காக எனது மற்றும் உலக நாடுகளின் விஜயம் மிகவும் அவசியமான தருணத்தில் அவுஸ்திரேலியாவும் உலகநாடுகளும் உக்ரைன் மக்களுடன் நிற்கும் என்ற செய்தியை தெரிவிக்கும் என அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.