மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னிலையில்  பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி!

பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இன்று புதன்கிழமை அழைக்கப்பட்டுள்ளனர்.

காலை 10 மணிக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க அறிவித்துள்ளார்.

மக்களுக்கும் அவர்களது வீடுகளுக்கும் போதிய பாதுகாப்பை வழங்காமை மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தத் தவறியமை தொடர்பில் இவர்களிடம் விசாரணை நடத்தப்படடவுள்ளது.

உரிய நடைமுறை எப்போதும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் வன்முறைக்கு காரணமானவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட வேண்டும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமைக்கான காரணங்களை ஆராய்வதற்காக புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி வியாழக்கிழமை (12) ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்