
சூரியவெவ பகுதியில் வைத்து 1995 ஆம் ஆண்டு கூறிய ஆயுதத்தால் தாக்கி ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன், தொடர்புடைய சந்தேக நபரை இன்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தற்போது கைது செய்யப்பட்ட நபர், சூரியவெவ பகுதியில் ஒருவரை கொலை செய்த சம்பம் தொடர்பில் கைது செய்யப்பட்டு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதன்படி கடந்த 2010 ஆம் ஆண்டு எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றால் இவர் குற்றவாளி என அடையாளப்படுத்தப்பட்டு இவருக்கு எதிராக பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் 10 வருடமாக குறித்த சந்தேக நபர் தலைமறைவாக இருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.