
சினிமா படங்ளை பார்க்கும் இளம் தலைமுறைகள் அதிகம். ஆனால் பெரியவர்களின் எண்ணிக்கையோ மிக குறைவு. அதே வேளையில் வீட்டிலிருக்கும் பெரியவர்களால் அதிகம் பார்க்கப்படுவது டிவி ஒளிபரப்பாகும் நாடகத் தொடர்களே.
சின்னத்திரை இந்த நாடக விசயத்திலும் கடும் போட்டி நிலவுகிறது என சொல்லலாம். புதுப்புது சீரியல்கள் வந்த படி இருக்கின்றன. அண்மையில் சித்தி 2 சீரியல் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியானது.
இந்நிலையில் தற்போது பாக்யலட்சுமி என்ற புது சீரியல் வரும் மார்ச் 16 முதல் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.
பிள்ளைகளை அக்கறையுடன் கவனித்துக்கொள்ளும் அம்மாவை நாம் பல நேரங்களில் கடிந்து பேசியிருப்போம். ஆனால் அவரின் தியாகத்திற்காக நாம் எப்போதாவது பாராட்டியுள்ளோமா என்றால் அது கேள்விக்குறி தான்.
அப்படியாக இல்லத்தரசியாக இருக்கும் ஒவ்வொரு அம்மாவின் பெருமையை பேச பாக்யலட்சுமி வருகிறாள்.