மனதை உருக்கும் முள்ளிவாய்க்கால் பதிவுகள் (படங்கள்)

இனத்துக்கவும் இனத்தின் உரிமைக்காக்கவும் போராடிய ஒரு இனம் இரக்கமே இல்லாமல் இற்றைக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் கொன்றொழிக்கப்பட்டது.

கொத்துக்குண்டுகளும் தோட்டாக்களும் கிழித்த எம்மவர் உடல்கள் இதே மண்ணில் தான் சிதறி விழுந்தன.

அம்மாவை பிரிந்து பிள்ளையும், கணவனை பிரிந்து மனைவியும், அண்ணனை பிரிந்து தங்கையும் என அனைத்து உறவுகளும் இதே மண்ணில் தான் அனாதையாக்கப்பட்டனர்.

கை, கால் இழந்து பச்சிளம் குழந்தையும் கண், காது இழந்து இளம் குமரியும் இதே மண்ணில் தான் வாழ்க்கையை தொலைத்தனர்.

இத்தனையும் சிங்கள பேரினவாத்தால் அரங்கேற்றப்பட்டு இன்று 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்