மந்தகதி ரயிலுக்குள் பாய்ந்து இளைஞர் தற்கொலை:

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மன்னவாகினி ரயிலுக்குள் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.
கிளிநொச்சி ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் இந்த விபத்து இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து 6.25 மணிக்கு புறப்பட்ட மந்தகதி  (4082) புகையிரதம் கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது, கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோமீற்றர் தூரத்தில்  மந்தகதி ரயிலுக்குள் பாய்ந்து இளைஞன் தற்கொலை செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய யோகேந்திரன் அஜந்தன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம்  தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்