மத்திய வங்கியின் ஆளுநர் 4 மாவட்டங்களின் கிராம பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்.

கிளிநொச்சி அறிவியல் நகர் மத்திய வங்கியில் இன்று (08.09.2020)  மத்திய வங்கியின் ஆளுநர் WGD அஸ்மின்  தலைமையில்  4 மாவட்டங்களின் கிராம பிரதிநிதிகளுடன் நுண்கடனினால் பாமரமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்  தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது மத்திய வங்கியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்ற  கலந்துரையாடலில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களின் கிராம பிரதிநிதிகளுடன்  மத்திய வங்கியின் ஆளுநர் நுண்கடனினால் மக்களின் பாதிப்பு தொடர்பாக கேட்டதாரிந்துகொண்டார்.

கலந்துரையாடளுக்கு வருகை தந்த கிராமமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களின் கருத்துக்களை தெரிவித்தார்கள். தனியார் நிதி நிறுவனங்கள் கிராம மட்டத்தில் உள்ள பெண்களை குறிவைத்து இவ்வாறான நுண்கடன்களை வழங்கி வருகின்றார்கள் இதனால் ஒரு கடனை அடைப்பதற்கு இன்னொரு கடன் இவ்வாறான பல கடன்களை பெற்று திருப்பி செலுத்த முடியாமல்தற்கொலை முயற்சிக்கும் செல்லப்படுவது மன வேதனை அளிக்கின்றது என்று தெரிவிக்கின்றார்கள்.

நுண்கடன் வழங்குவதற்கு வருகின்றவர்கள் மிகவும் அமைதியாகவும் அன்பாகவும் பணங்களை வழங்குகிறார்கள் வழங்கிய பணங்களை வழங்கிய கடன் தொகையை மாதாந்தம் அறவிட வரும்போது கடன் பெற்றவர்களை உதாசீனப்படுத்தி தவறான எண்ணங்களோடு தவறான வார்த்தைப் பிரயோகங்கள் பாவித்து மக்களை மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றார்கள் இது தொடர்பாக அரசாங்கம் கூடிய கவனம் செலுத்த வேண்டும்  கோரிக்கை முன் வைத்துள்ளார்கள்


இவ்  கலந்துரையாடலில்   மத்திய வங்கியின் பிரதி  ஆளுநர் சிறி வர்த்தன, துணை ஆளுநர்களான நாணயக்கார மற்றும் கருணாரத்தின,  மத்திய வங்கியின் திணைக்கள பணிப்பாளர்கள் மேலதிக பணிப்பாளர்கள் கிராமமட்ட  பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்