மண்ணெண்ணையில்லாத காரணத்தினால் கடல் தொழில் பாதிப்பு-மீனவ குடும்பங்கள் போராட்டம்

மண்ணெண்ணையில்லாத காரணத்தினால் கடல் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீனவ
குடும்பங்கள் பல கஸ்டங்களை எதிர்நோக்கிவருவதாக இலங்கை வாழ்  மீனவ
குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பெற்றோல் மற்றும்
டீசல்  என்பனஓரளவு கிடைக்கப்பெற்றாலும், மண்ணெண்ணையை பெற்றுக்கொள்ள
முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டில் உள்ள மீனவ குடும்பங்கள்
தங்களது தொழினை மேற்கொள்வதில் கடும் நெருக்கடியை ஏற்பட்டுள்ளது.

வாழ்வாதார தொழிலாக கடற்றொழிலை மேற்கொள்கின்ற பொது மக்கள் பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளதாகவும்.அத்தோடு கடலுணவுகளின் விலைகள் சந்தையில்
அதிகரித்து காணப்படுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக இந்த நிலைமையினை விரைந்து தீர்த்து வைக்குமாறு தெரிவித்து
நாளாந்தம் பல்வேறு இடங்களில் கடற்றொழிலாளர்கள் போராட்டங்களை நடாத்தி
வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்