மண்ணெண்ணையின் விலை அதிகரிக்கும் பிரதமர் தெரிவிப்பு

மண்ணெண்ணையின் விலை அதிகரிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதோடு, மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களுக்கு மண்ணெண்ணையின் விலை அதிகரிப்புக்கான நிவாரணத்தை பணமாக தருவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் மீனவர்களை பாதுகாக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்  பிரதமர்   தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வில் கலந்து கொண்டு வாய்மூல விடைக்கான வினாவுக்கு பதிலளித்து உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மீனவர்களுக்கு  தேவையான எரிபொருள், ஐஸ் போன்ற உபகரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மீனவர்களுக்கு நாளாந்தம் தேவையான எரிபொருளை வழங்குவது தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் இணக்கப்பாடு ஏட்டப்பட்டுள்ளது. இதன்படி மீன்பிடித்  துறைமுகங்களின் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றன எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்