மணிகண்டன் மீது நடிகை சாந்தினி கொடுத்த புகார்!

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி பாலியல் புகார் கொடுத்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடித்து கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான படம் நாடோடிகள் படத்தில் சாந்தினி என்பவர் நடித்திருந்தார். இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் அளித்திருந்தார்.

அதன்படி அமைச்சர் மணிகண்டன் தன்னுடன் நெருக்கமாக பழகியதாகவும் இதன் காரணமாக தான் கர்ப்பமாக இருந்ததாகவும் ஆனால் வலுகட்டாயமாக கர்ப்பத்தை வலுக்கட்டாயமாக கலைக்க வைத்தார் என்று பரபரப்பு குற்றம்சாட்டினார்.

சாந்தினியின் குற்றச்சாட்டை மறுத்த மணிகண்டன், தனக்கு அந்தப் பெண் யாரென்றே தெரியாது எனக் கூறினார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவந்த இந்த வழக்கில் திடீர் திருப்பமாக மணிகண்டன் மீது கொடுத்த புகாரை திரும்ப பெற்றுள்ளாராம். இதனால் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்