மணமகள் தோற்றத்தில் பிரபல சீரியல் நடிகை சரண்யா! டும் டும் டும் கல்யாணமாம்! மாப்பிள்ளையுடன் புகைப்படத்தில்

நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர் நடிகை சரண்யா. ஏற்கனவே செய்தி வாசிப்பாளாராக இருந்தவர் தற்போது பிரபலமாகிவிட்டார்.

பிரியா பவானி சங்கர், வாணி போஜன் போல இவரும் சீக்கிரம் சினிமாவில் ஹீரோயின் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

அண்மையில் அவர் தன் தோழர் ராகுல் என்பருடன் புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார். விரைவில் இருவரும் திருமணம் செய்யவுள்ளனராம்.

தான் தன் காதலை வெளிப்படையாக அறிவித்ததாகவும், இந்த துறையில் இருக்கும் பெண்கள் காதலில் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும், போலியாக சிங்கிள் என்று சொல்லத்தேவையில்லை என்றும் சரண்யா கூறியுள்ளார்.

மேலும் அவர் பெற்றோர்கள் சம்மத்துடன் நாம் திருமணம் செய்துகொள்வோம், ஆனால் திருமண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

முகநூலில் நாம்