மட்டக்களப்பு வவுணதீவில் 3 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள ஈச்சந்தீவு களப்புப் பகுதியில் உயிரிழந்த நிலையில் நபரொருவர் இன்று வியாழக்கிழமை (23) மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு திருப்பெருந்துறை பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான விஜிதரராஜ் என்பவரே இவ்வாறு இறந்தவராவார்.

இவர் திருப்பெருந்துறையில் இருந்து புதன்கிழமை (22) இரவு ஈச்சந்தீவு களப்பு பகுதிக்கு தோணியில் சென்றுள்ளார்.

இந்த நிலையில் இவர் தோணியில் இருந்து இறங்கும் போது மது போதையில் வீழ்ந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவருகிறது.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் பீற்டர் போலின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்