மட்டக்களப்பில் வரட்சி; குடிநீருக்குத் தட்டுப்பாடு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவும் கடுமையான வரட்சி காரணமாக, குளங்கள், ஏரிகள், நீரோடைகள் வற்றிவருகின்றன.

இவ்வாறு நீர் நிலைகள் வற்றிவருவதால் குடிநீருக்கும் பல இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வரட்சி காரணமாக, கொக்கட்டிச்சோலை, வெல்லாவெளி, வவுணதீவு, செங்கலடி உட்பட பல பிரதேசங்களில் வேளாண்மை வயல் நிலங்கள் கருகிப்போய் காணப்படுகின்றன.

கால்நடைகளும் மேய்ச்சல் தரையின்றி, அலைந்து திரிவதையும் அவதானிக்க முடிகின்றது.

முகநூலில் நாம்