மக்கள் எழுச்சி போராட்டத்தில் சமத்துவக் கட்சியும் பங்கேற்கிறது


மக்கள் விரோத அரசுக்கு எதிராக மக்களால் நடத்தப்படும்  மாபெரும் மக்கள் போராட்டத்தில் சமத்துவ கட்சியும் பங்கேற்கிறது என அக்கட்சி தெரிவித்துள்ளது .


நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பெரும் சுமைகளை நாளாந்தம் சுமந்து வருகின்றனர். ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக நாளுக்கு நாள் பிரச்சனைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.


எனவேதான் பொறுமை இழந்த பொதுமக்கள் இந்த அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் எமது கட்சியினரும்  ஈடுபட உள்ளனர்.


எனவே மக்களால் முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்தில் சமத்துவ கட்சியும் பங்கேற்கிறது என அக்கட்சியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்