மக்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாயம்


மின்சாரக் கட்டணத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்களினூடாக நாட்டில் உள்ளவர்களில் 30 சதவீதமானவர்களின் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதாக என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மின்சாரத்தை குறைந்தளவு பயன்படுத்துபவர்களுக்கு 100 சதவீத கட்டண அதிகரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

தற்போது ஓர் அலகு 2.50 ரூபாய் என்ற நிலையில் இது 6 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளது.

இவ்வாறு இரண்டு மடங்காக அதிகரிக்கப்படுவதன் மூலம் 30 சதவீதமானவர்கள் மின் கட்டணங்களை செலுத்த முடியாமல் போய் அவர்களது மின்சாரம் துண்டிக்கப்படும் நிலை ஏற்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்