மக்களிடம் கோரிக்கைவிடுக்கும் இராணுவத் தளபதி

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (26) மாலை இடம்பெற்ற ஊடகச் சந்திப்டபிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

´நாட்டின் சில இடங்களில் சிலர் தற்போது முகக் கவசங்களை அணிவதில்லை. இலங்கைக்குள் கொவிட் 19 அச்சுறுத்தல் இல்லை என கருதுவதே இதற்கான காரணம் என நான் நினைக்கின்றேன்.

சமூகத்தில் தொற்றாளர்கள் இல்லாவிடினும் வைத்தியசாலைகளிலும், தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் தொற்றாளர்கள் சிகிச்சை பெறுகின்றனர். ஆகவே, இது குறித்து சமூக பொறுப்புடன் அனைவரும் செயற்பட வேண்டும்.

ஆகவே, சுகாதார அமைச்சு வழங்கியுள்ள சுகாதார அறிவுறுத்தல்களை முழுமையாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்´ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்