போலியான தகவல்களை பரபுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

கொரேனா தொடர்பில் போலியான தகவல்களை சமூகத்தில் பரப்பும் தரப்பினரை கண்டறியுமாறு அரசாங்கம் பாதுகாப்பு பிரிவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

மக்களை தேவையற்ற குழப்பங்களுக்கு உட்படுத்தும் வகையிலும் ஏமாற்றும் வகையிலும் போலித் தகவல்கள் பரப்பபடுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் அரசாங்கம் விடுமுறை தினத்தை அறிவிக்க மற்றும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக போலித் தகவல்கள் பரப்பபட்டு வருகின்றன.

எனினும், இதுவரை அவ்வாறான எந்தவித முடிவுகளும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் போலியான தகவல்களுக்கு ஏமாறாது சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக செயற்படுமாறு அரசாங்கம் பொதுமக்களை கோரியுள்ளது.

முகநூலில் நாம்