போராட்டத்துக்கு ஆதரவளித்த மக்கள்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று 2000 நாட்களை கடக்கின்ற நிலையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகிய இன்று (30) தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற நீதியான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பாரிய அளவிலான மக்கள் போராட்டம் ஒன்றினை நடத்த உள்ளதாகவும் அதற்கு அனைத்து தரப்பினரையும் ஆதரவு வழங்குமாறும் கோரியிருந்தனர்.

அதற்கமைய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று புதுக்குடியிருப்பு நகரில் இடம்பெறும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம் பூரண ஆதரவு வழங்குவதாகவும் அனைவரும் ஆதரவு வழங்குமாறும் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

புதுக்குடியிருப்பு நகரில் உள்ள அனைத்து வர்த்தக நிலயங்களையும் காலை முதல் நண்பகல் 12 மணிவரை மூடி போராட்டத்துக்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாகவும் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் நவநீதன் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய இன்று காலை முதல் புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் உள்ள வணிக நிலையங்களை மூடி வர்த்தகர்கள் பூரண ஆதரவு வழங்கிவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்