
சுற்றுலாத்துறையை சீர்குலைக்கும் வகையில் போராட்டங்களை மேற்கொள்வதுதேசத்துரோக செயற்பாடு என சரத் வீரசேகர தெரிவித்தார்.நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.ஏற்றுமதி வருமானத்திற்கு அப்பால் நாட்டுக்கு அந்நிய செலாவனி அதிகமாகவரும் வழியாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது என்றும் சரத் வீரசேகரசுட்டிக்காட்டினார்.நாட்டில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நெருக்கடி மற்றும் பொருளாதாரஸ்திரமற்ற தன்மை என்பன இன்று மீண்டு வருவதாக சரத் வீரசேகரகுறிப்பிட்டார்.ஆகவே போராட்டங்களை மீண்டும் நடத்தி அதனை குழப்பியடிக்க வேண்டாம் என்றும்அவ்வாறு செய்தால் அது தேசத்துரோக செயற்பாடு என்றும் சரத் வீரசேகரகுறிப்பிட்டார்.