போராட்டங்களுக்கு பிள்ளைகளை அழைத்துவந்தால் கைது

போராட்டங்களுக்கு பிள்ளைகளை அழைத்து வரும் பெற்றோர்களை கைது செய்வதற்கு
ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர்
பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அண்மையில்  காலிமுகத் திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் போது
பொலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பதற்ற
நிலைமையின் போது குழந்தைகள் சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இதன்
போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் ஊடகங்களில் ஒளிப்பரப்பான போது
பொலீஸாரின் செயற்பாடுகள் மீதும் அரசின்  மீதும் கடும் விமர்சனங்கள்
முன்வைக்கப்பட்டிருந்தன.

இதனை தொடர்ந்தே ஜனாதிபதி இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளதாக  தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்