போராட்டம் என்ற பெயரில் நாட்டை சீர்குலைக்கும் மற்றும் வர்த்தகநிறுவனங்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்துஆராயுமாறு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இலங்கை மனித உரிமைகள்ஆணைக்குழுவிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளது.தொடர் போராட்டங்கள் காரணமாக கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் வீதிகள்தடை செய்யப்பட்டுள்ளதாகவும், பஸ் சேவைகள் பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கடிதத்தில்தெரிவித்துள்ளார்.போராட்டத்தில் ஈடுபடுவதாகக் கூறும் குழுக்களின் இத்தகைய சேதப்படுத்தும்போராட்டங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து நாட்டு மக்கள் அனைவருக்கும்நீதி வழங்குமாறு அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.மே 9, 2022 அன்று ஒரு குழுவினரால் நடத்தப்பட்ட போராட்ட அலை காரணமாக பஸ்தொழில் ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டதாகவும், பஸ் உரிமையாளர்கள்இன்னும் அவதிப்படுவதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
