
வருடாந்த கிறிஸ்துமஸ் யாத்திரைக்காக இத்தாலி தலைநகர் ரோம் சென்றுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் தனது உரையை கடந்த வியாழன் அன்று நிகழ்த்தினார்.அதில் உக்ரைன் போர் குறித்து பேசும்போது கண்ணீர் விட்டு அழுத போப்!
“அவர்கள் மிகவும் துன்பப்படுகிறார்கள்”- என்றார்.
தொடர்ந்து, உரையாற்றிய போப் உக்ரைன் மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து பேசும் போது திடீரென துயரம் தாளாமல் அமைதி ஆகி விட்டார். சில நொடிகளில் கண்ணீர் விட்டு அழுதார்.
2022 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைன் மீது தனது தாக்குதலைத் தொடங்கியது. கடந்த 10 மாதங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. பல நகரங்கள் ஏவுகணை தாக்குதலால் உருமாறி போயின. பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
இப்படி தொடர்ந்து நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர இருதரப்பையும் சர்வதேச நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இரு நாடுகளிலும் உயிர்ச்சேதம் ஏற்படுவதால் இதை ஒரு முடிவுக்கு கொண்டு வருமாறு பல அமைப்புகளும் கோரிக்கை வைக்கின்றன. ஆனால் ரஷ்யா அவ்வளவு எளிதாக விடுவதாக இல்லை.
இந்த நிலையில் வருடாந்த கிறிஸ்துமஸ் யாத்திரைக்காக இத்தாலி தலைநகர் ரோம் சென்றுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் தனது உரையை கடந்த வியாழன் அன்று நிகழ்த்தினார்.
தனது உரையின் நடுவில் உக்ரைன் மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். அதை தொடர்ந்து, உரையாற்றிய போப் உக்ரைன் மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து பேசும் போது திடீரென துயரம் தாளாமல் அமைதி ஆகி விட்டார். சில நொடிகளில் கண்ணீர் விட்டு அழுதார்.
இதைக்கண்ட போப்பின் அருகில் இருந்த ரோம் மேயர் ராபர்டோ குவால்டியேரி உள்ளிட்ட கூட்டம், அவரால் பேச முடியவில்லை என்பதை உணர்ந்து, அவரைத் தேற்றினர். பின்னர் அவர் தன்னை தானே தேற்றிக்கொண்டு தொடர்ந்து பேசினார்.
அப்போது அவர், “மாசற்ற கன்னியே, இன்று நான் உக்ரேனிய மக்களின் நிலையை உங்களிடம் கொண்டு வர விரும்பினேன். உக்ரைன் மக்கள் அமைதிக்காக நான் இறைவனிடம் கேட்டுக்கொள்கிறேன். தற்போது, அந்தத் தியாக பூமியின் குழந்தைகள், முதியவர்கள், தாய்மார்கள், அப்பாக்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரும் மிகவும் துன்பப்படுகிறார்கள். அவர்களது வேண்டுகோளை நான் உங்களுக்கு முன்வைக்க விரும்புகிறேன்” என்றார்.