“போன உயிர் மீண்டும் வந்தது” யாழ் பயணிக்கு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் தனது கைப் பையை மறந்து விட்டுச் சென்ற யாழ். நபருக்கு அவர் தொலைத்த பை மீண்டும் கிடைத்துள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த நபர் யாழ்ப்பாணம் செல்வதற்காக கோட்டை ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தபோது தனது பையை மறந்து சென்றுள்ளார்.

ரயிலில் பயணித்துகொண்டிருந்த போது சிறிது நேரத்தின் பின்னர் தனது பையை விட்டுச் சென்றதாக அவர் ரயில் பாதுகாப்பு அதிகாரிகளிடம் அறிவித்துள்ளார்.

அதனையடுத்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் அவர் அமர்ந்திருந்த ஆசனத்திலிருந்து அவருடையை கைப் பையை மீட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகள் அதனை அநுராதபுரம் ரயில் நிலையத்தில் வைத்து ​அவரிடம் கையளித்துள்ளனர்.

அந்த பையில் ஒரு இலட்சம் ரூபாய் பணத்துடன் மோட்டார் சைக்கிளொன்றை கொள்வனது செய்வதற்கான ஆவணங்களும் இருந்தாக கூறப்படுகிறது.

இதனால் போன தனது உயிர் மீண்டும் வந்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

முகநூலில் நாம்