போதைப்பொருள் வைத்திருந்தவர் கைது

சட்டவிரோதமான முறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – கிரேண்ட்பாஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரிடமிருந்து 03 கிலோ 500 கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து கிரேண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்