போதைப்பொருள் வர்த்தகர் வெலே சுதா பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றம்

போதைப்பொருள் வர்த்தகரான கம்பளை விதானாகே சமன்த குமார எனும் “வெலே சுதா” உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே முன்னிலையில் இன்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது, ​​குற்றம்சாட்டப்பட்ட “வெலே சுதா” பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கின் மற்றுமொரு பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள வெலே சுதாவின் மனைவியும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

அதன்பின், குறித்த வழக்கை டிசம்பர் 5 ஆம் திகதி விசாரணையை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்