போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கழுகு! ஸ்ரீலங்காவில் சினிமாவை மிஞ்சிய சம்பவம்

பாதாள உலக குழுவின் தலைவரான அங்கொடா லொக்கா போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கழுகு ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

மீகொட பகுதியில் உள்ள ஒரு கோழிப் பண்ணையிலிருந்து குறித்த கழுகு கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

பண்ணையின் உரிமையாளர் மற்றும் மற்றொரு நபர் விமான துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டனர்.

மேல் மாகாண பொலிஸ் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீகொட பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 30 வயதுடைய ஆண்கள் என அடையாளம் காணப்பட்டு, அதுருகிரியா காவல் நிலைய பொறுப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தலுக்கு கழுகை பயன்படுத்தும் சம்பவம் சினிமாவை மிஞ்சியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை அங்கொடா லொக்கா இந்தியாவில் கொலை செய்யப்பட்டாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்