
ஐஸ் போதைப்பொருளுடன் 40 வயதுடைய பெண்ணொருவர் வெள்ளிக்கிழமை (02) அதிகாலை புத்தளம் நாகவில்லு பகுதியில் பொலிஸ் புத்தளம் போதை ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு ஐஸ் போதைப்பொருளை மற்றுமொருவருக்கு விற்பனை செய்வயற்கு கொண்டு செல்லவிருந்ததாக பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த வீட்டினை சுற்றிவளைத்துள்ளனர்.
இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்ட போது குறித்த பெண்ணிடம் ஒரு கிலோ 8 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிட் போதை ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகபெருமதியென பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்தினர்.
இவ்வாறு ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பெண்ணை புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.