பொலிஸ் சேவை எதிர்நோக்கியுள்ள துரதிஸ்டமான நிலைமைக்கு காரணம் இதுதான்

பொலிஸ் திணைக்களத்திற்கு நேரடி தலைமைத்துவத்தை வழங்க கூடிய புகழ் பெற்ற உத்தியோகத்தர்களுக்கு பொலிஸ்மா அதிபர் பதவி வழங்கப்படாமையே பொலிஸ் சேவை தற்போது எதிர்நோக்கியுள்ள துரதிஸ்டமான நிலைமைக்கு காரணம் என மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டில் தான் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்ட போது அந்த நேரத்தில் தன்னைவிட மூத்தவராக இருந்த ஒரு நேர்மையான அதிகாரி அந்த வாய்ப்பை இழக்க விரும்பாததால் அந்த பதவியை தான் ஏற்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

பொலிஸ்மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்படவில்லை என்றாலும், தனது கடமைகளில் நியாயமான, நேர்மையான பொலிஸ் அதிகாரியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் எஸ்.எம். விக்ரமசிங்க தெரிவித்தார்.

பொலிஸ் சேவையில் இருந்து இன்று (31) ஓய்வுப்பெறவுள்ள மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்கவிற்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்வு நேற்று (30) கண்டி பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முகநூலில் நாம்