
பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் தனது கடமை நேர துப்பாக்கியில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தங்காலை பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்திற்கு முன்னால் இந்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
உயிரிழந்தவர் வீரகெட்டிய பிரதேசத்தை சேர்ந்த தங்காலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜென்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.