
பொலிஸார் எங்களை தாக்கினார்கள். அவர்கள் எங்களை முழங்காலில்
இருக்கவைத்தனர். அட்டைகளை எங்கள் மீது விட்டனர் மின்சார சித்திரவதை
செய்தனர் .எங்கள் கைகளில் விலங்கிட்டு ஜீப்பிற்கு கொண்டு சென்ற அவர்கள்
எங்களை ஜீப்பில் முழங்காலிடச்செய்து மின்சார சித்திரவதைக்கு
உட்படுத்தினார்கள் மாணவர் ஒருவரின் தோல் உரிந்து இரத்தம் கொட்ட
ஆரம்பித்தது.
ஆசிரியர்கள் மாணவர்களிற்கு உடல்ரீதியான தண்டனையை வழங்கிய பொலிஸார்
மாணவர்களை தண்டித்த மில்லனியாசம்பவம் இலங்கையில் அரச அதிகாரிகள்
சிறுவர்களிற்கு வன்முறைகளை தயக்கமின்றி பயன்படுத்துவதை
வெளிப்படுத்தியுள்ளது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள்
ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.