
பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று இரவு கிராண்ட்பாஸ் முவதொர தொடர் மாடி வீட்டுத் தொகுதியில் விசேட சுற்றிவளைப்பு மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது 870 வீடுகள் சோதனைக்கு உட்படுத்தபட்டுள்ளதுடன் 61 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 39 ஹெரோயினும் 85 கிராம் கஞ்சாவும் 7 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது