பொலிவியா இடைக்கால அதிபர் ஜூனைன் அனெசுக்கு கொரோனா!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

நேற்று மதிய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தை கடந்திருந்தது. பலி எண்ணிக்கை 1,500 ஆக இருந்தது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அங்கு கடந்த மே மாதம் நடக்க இருந்த அதிபர் தேர்தல், வரும் செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொலிவியாவின் இடைக்கால அதிபர் ஜூனைன் அனெசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஜூனைன் அனெஸ் தான் நலமுடன் இருப்பதாகவும், தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டு பணிகளை தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அந்த நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி, மத்திய வங்கியின் தலைவர் உள்ளிட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் நாம்