பொருளாதார நெருக்கடி: வவுனியாவில் 500க்கு மேற்பட்ட கர்ப்பிணித்தாய்மார் பாதிப்பு

வவுனியாவில் பொருளாதார நெருக்கடி காரணமாக 561 கர்ப்பிணித் தாய்மார்
பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார்
தெரிவித்துள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக வவுனியா மாவட்டத்தில் பொருளாதார
நெருக்கடியால் பாதிக்கப்பட்டோர் தொடர்பான விபரங்களைக் கோரிய போதே அவர்
இதனைத் தெரிவித்தார்.

வவுனியா பிரதேச செயலகத்தில் 348 கர்ப்பிணித் தாய்மாரும், வெண்கல
செட்டிகுளத்தில் 213 கர்ப்பிணித் தாய்மாருமாக 561 பேர்
பாதிப்படைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வவுனியா வடக்கில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில்
புத்தெழுச்சி மையங்களை உருவாக்கி பாதிக்கப்பட்ட மக்கள் கண்காணிக்கப்பட்டு
வருவதனால் பொருளாதார நெருக்கடியால் கர்ப்பிணித் தாய்மாருக்கு நிலையான
பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முகநூலில் நாம்